ஆந்திராவின் அனந்தபூரில் உள்ள குண்டக்கல் பகுதியில் காசாபுரம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் வண்டி வெடித்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
மைசுருவைச் சேர்ந்த ரவிச்சந்திரா என்பவர் கோவில் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் சமயத்தில் புல்லட் வெடித்துள்ளது.
மைசுருவிலிருந்து காசாபுரம் ஆஞ்சநேயரைப் பார்க்க 471 கிமீ தூரம் வண்டியிலேயே பயணித்து இடைவிடாமல் வாகனம் ஓட்டி வந்ததுதான் வாகனம் வெடித்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.