மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்பட்டாலும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பைச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ( படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம்/ குளிர்சாதனமில்லா பேருந்துகள் ) பெண்களுக்குத் தனியாக படுக்கை எண் 1 LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று தனிப் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்று வருகிறது.