பெண் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி -பழவூரில் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது.அங்கு பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளர் மார்கரெட் கிரேசி ஈடுபட்டிருந்தார்.

அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உதவி ஆய்வாளர் மார்கரெட் கிரேசியை தான் அரிவாளால் சரமாரியாக தாக்கினார்.

நெல்லை பெண் ஆய்வாளர்

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சக போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலில் ஈடுபட ஆறுமுகத்திடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சில தினங்களின் முன் ஆறுமுகம் மதுபோதையில் வாகனம் ஓட்டி வர,அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மார்கரெட் கிரேசி, ஆறுமுகத்தை பிடித்து அபராதம் விதித்துள்ளார் .

இதனால் பழிவாங்கும் நோக்கத்தில் உதவி ஆய்வாளர் மார்கரெட் கிரேசியை தாக்கியுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/