பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரி வழக்கு – நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றபின் , சசிகலா, டிடிவி தினகரனை கட்சியின் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளில் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் விசாரணை சென்னை நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 8) இந்த வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/