பொதுத்தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!!

தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 5 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களுக்கும் பொதுத்தேர்வைக் கண்காணிக்க தனித்தனி அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமனம் செய்துள்ளது.

பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரிகளாக பள்ளிக்கல்வித்துறை இயக்கக உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/