பொதுத்தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை!!

தமிழகத்தில் க 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

*மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்க முடிவு

*பத்தாம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாணவர்களுக்கு விலக்க அனுமதி

*11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பொது ஆய்வக உதவியாளர் பணி அமர்த்திக் கொள்ள அனுமதி

*மாற்றுத்திறன் தேர்வர்கள் தளத்திலேயே தேர்வு எழுத வசதிகள் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி

*தேர்வு ஈடுசெய் நேரம் ,வினாத்தாள் வாசிப்பாளர், சொல்வதை எழுதுபவர் , ஆய்வக உதவியாளர் நியமனம் குறித்து அரசாணை

*தேர்வுத் துறையின் புதிய உத்தரவுகளை மத்திய கல்வி வாரியத்தின் சலுகைகளை பின்பற்ற மாநில தேர்வு துறை முடிவெடுத்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/