போலீசாரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்..! என்ன காரணம்.?

ஈரோடு உள்ள பிரபல தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வடமாநில இளைஞர் ஒருவர் நேற்று இரவு பணியின் போது விபத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக முயன்றனர்.

அப்போது அங்கு பணியாற்றும் சக வடமாநில இளைஞர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த வட மாநில இளைஞருக்கு காப்பீடு தொகை பெற்றுக் கொடுப்பதாக கூற, முழு தொகையையும் உடனடியாக செலுத்தும்படி கேட்டுள்ளனர்.

ஆனால் அதனை தர மறுத்து இறந்தவரை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சி செய்ததால் ஆத்திரமடைந்த வடமாநில இளைஞர்கள், அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

தடுக்க வந்த போலீசாரையும் கடுமையாக தாக்கினர். 7 போலீசார் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/