மதுரை மீனாட்சி அம்மன் கோயில் – சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.

விழாவில் வருகிற 12-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.

ஏப்.15-ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அதனையடுத்து வரும் ஏப்.16-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/