மாடு வளர்க்க லைசென்ஸா !!மீறினால் ரூ.10,000 அபராதம்!

மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால், மாநில அரசிடம் அனுமதி பெற்று, மாடு வளர்ப்பதற்காக லைசென்ஸ் பெற வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறினால் லைசென்ஸ் இல்லாமல் மாடு வளர்ப்பவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நகர்ப்புறங்களில் பசு அல்லது எருமை மாடுகளை வீடுகளில் வைத்து வளர்க்க 100 சதுர மீட்டர் பரப்பளவு இட வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

வளர்க்கப்படும் கால்நடைகள் வழிதவறி சென்றால் அதற்கும் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்

மாடு

கால்நடைகளுக்கான இருப்பிட விவரங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்து புதிய விதிமுறைகளின் கீழ் உரிமம் பெற வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கால்நடை வளர்ப்பின் போது சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும்,உரிமத்தின் வருடாந்திர கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/