மாவட்ட சுகாதாரத் துறையில் லேப் டெக்னீசியின் வேலை!!!

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேசிய நல்வாழ் குழுமத்தின் பல்வேறு கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lab Attendant = 01

சம்பளம்: மாதம் ரூ. 8,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Technician
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000

பணி: Microbiologist
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், எம்.டி (நுண்ணுயிரியல்) முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம்
நுண்ணுயிரியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.40,000. எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்.

பணி: Auxiliary Nurse Midwifery
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: செவிலியர் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்று தமிழ்நாடு செவிலியர் சங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Psychologist
சம்பளம்: மாதம் ரூ. 13,000
தகுதி: உளவியல், சமூகவியலாளர் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cleaner
சம்பளம்: மாதம் ரூ. 6,500
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Driver
சம்பளம்: மாதம் ரூ. 9,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi purpose Hospital Worker
சம்பளம்: மாதம் ரூ. 8,500
தகுதி: எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Dental Assistant
சம்பளம்: மாதம் ரூ. 10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Pharmacist
சம்பளம்: மாதம் ரூ. 15,000
தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Refrigeration Mechanic
சம்பளம்: மாதம் ரூ. 20,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 16 22 பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627 002
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 13.04.2022

மேலும் விவரங்களுக்கு https://tirunelveli.nic.in/notice_category/recruitment/

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/