மீண்டும் தலைதூக்கும் கொரோனா… இன்றைய நிலவரம் !!!

இந்தியாவில் கொரோனா தொற்று முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பாதிப்பை ஏற்படுத்தியது.

வரும் ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,109 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 1,033 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது 185.38 கோடி டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது

தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11492 ஆக பதிவாகியுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/