மும்பை பங்கு சந்தை; இன்று சரிவு

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு சரிவை நோக்கி சென்றது.

காலை 9.50 மணி நிலவரப்படி 207.99 புள்ளிகள் வரை அல்லது 0.34 சதவீதம் அளவுக்கு சரிவடைந்து 60,403.75 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 52.45 புள்ளிகள் வரை அல்லது 0.29 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு 18,000.95 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

எச்.டி.எப்.சி. நிறுவன பங்குகள் 1.66 சதவீதம் அளவுக்கு சரிந்து ரூ.2,634.35 என இருந்தது.

எச்.டி.எப்.சி. வங்கி பங்குகள் 2.58 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.1,613.65 ஆக இருந்தது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/