முல்லைப் பெரியாறு வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

தமிழகம்-கேரளா இடையிலான முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு ரிட் மனுக்கள் மீதான வாதம் நிறைவு பெற்ற நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம் புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என நேற்று நடைபெற்ற விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/