மெரினா பீச் : அதிகாலையில் அசைந்த மார்ம பொருள் .!

சென்னை மெரினா பீச்சில் நேற்று அதிகாலை நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது வாக்கிங் சென்ற நபர்கள் இதை பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உயிரிழந்திருக்கிறார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் 50 வயதான பச்சையப்பன் என்பதும், இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்த நிலையில் தனது மகனுடன் பச்சையப்பன் வாழ்ந்து வந்துள்ளார்.

மதுபோதைக்கு அடிமையான இவர் வீட்டிற்கு செல்லாமல் மெரினா பீச் மற்றும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை இருவர் அடித்து கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.