ரயில் நிலையங்களில் இனி இதெல்லாம் வாங்கலாம்..

உள்ளூர் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கைவினை கலைஞர்கள், விவசாயிகளின் பெருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு சந்திப்பில் கைத்தறி ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது .

முக்கிய ரயில் நிலையங்களில் One Station One Product என்ற தலைப்பின் கீழ் விற்பனையகம் திறக்கப்படும்

கடந்த மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டு விற்பனை தொடங்கப்பட்டிருந்தது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை செயல்பட்ட இந்த கடையில் நல்ல விற்பனையானதாக நெசவாளர்கள் கூறியுள்ளனர்.

விற்பனைக்கு அனுமதி அளித்துள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ள கைவினைக் கலைஞர்கள் நிரந்தரமாக ஒரு கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/