ராஜஸ்தானில் சாலை விபத்து … பிரதமர் மோடி இரங்கல்!!

ராஜஸ்தானில் ஜுன்ஜுனு மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது மினி சரக்கு வேன் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்

ஒரு சரக்கு வேனில் 22 பேர் யில் கூலி தொழிலாளர்கள் தன் கிராமத்திற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிராக்டர் மீது இந்த சரக்கு வேன் பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 8 பேரும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

விபத்திற்கான காரணம் என்ன என குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/