ரூ.8.74 கோடியில் மிடுக்கு வகுப்பறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரூ.8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிடுக்கு வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில், 8 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிர் சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள் ,15 குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.

நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையேற்க, தலைமைச் செயலாளர் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் இறையன்பு, மனித வள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி க. ராஜேந்திரன் ஆகியோர் திறப்புவிழாவில் பங்கேற்கிறார்கள்.