ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.

ஆந்திராவில் மாற்றியமைக்கப்பட்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ரோஜா உள்பட 25 பேர் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், 25 அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆந்திராவில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆந்திரா நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் முன்னேற்றம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.