வங்கி இயங்கும் நேரத்தில் மாற்றம் !!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, இன்று முதல் (ஏப்ரல் 18, 2022) வங்கிக்கான நேரத்தை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கி மூடியதால் ஏப்ரல் 18, முதல் வங்கிகள் திறக்கும் நேரத்தை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. திங்கள்கிழமை (இன்று) முதல் காலை 9 மணிக்கே வங்கிகள் திறக்கப்படும்.

இந்த ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சந்தைகளின் வர்த்தக நேரம் காலை 9:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை இருக்கும்.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/