வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது,

இதனால் , அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்

ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/