‘விஜய் 66’ ஹீரோயின் குறித்து சூப்பர் அப்டேட் !

விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் பணிகள் நிறைவதற்கு முன்னரே விஜய்யின் 66வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த புதிய படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை ‘தோழா’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி விரைவில் நடக்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/