வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தடை விதிப்பு!!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

தமிழக- கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக சூறாவளிக் காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

வெள்ளியங்கிரி 6வது மற்றும் 7வது மலையில் கடும் மழை பெய்து வருகிறது. பக்தர்கள் மலை ஏறும் பாதை ஈரமாக இருப்பதுடன் மலை ஏறுவதற்கான சூழல் இல்லை.

தொடர் மழையால் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது