வேதா இல்லம்-அதிமுக மேல்முறையீடு..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் வழக்கு தொடர்ந்து அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்தார்.