ஸ்ரீநகர் என்.ஐ.டி. மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஹஜ்ரத்பால் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் தொடங்கி நடந்து வருகின்றன்.

டெல்லி, கேரளா உள்பட 5 மாநிலங்களில் கடந்த வார தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

இந்த சூழலில், காஷ்மீரில் ஒரே கல்வி மையத்தில் படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.