ஹெல்மெட் அணியவில்லை- பிரபல ஹீரோவுக்கு அபராதம்!!

இந்தி நடிகர் வருண் தாவன்,பவால் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது.

இங்குள்ள ஆனந்த் பாக் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது செல்போனில் சிலர் வீடியோக்கள் எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில் பைக்கில் வரும் வருண் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் செல்கிறார். இதைக் கண்ட போலீஸார், அவருக்கு அபராத சலான் அனுப்பியுள்ளனர்.

வேறொருவரின் நம்பர் பிளேட்டை அந்த பைக்கில் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்னும் ஒரு அபராத சலான் வழங்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/