1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர்

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையை பிரித்து, கிறித்தவ தெருவில் பகுதிநேர நியாயவிலைக்கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கேள்வி எழுப்பினார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

எங்கெல்லாம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் கடைகள் பிரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.