11 மாவட்டங்கள்!! மக்களே கவனமா இருங்க!!

சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை சேலம், நாமக்கல் ,கோவை, திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டையில் ஓரிரு மணி நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யலாம்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/