12ம் வகுப்பு வினாத்தாள் லீக் .அன்பில் மகேஷ் உறுதி!!

12ம் வகுப்புக்கான 2வது திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானதால் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் அன்பில் மகேஷ், ’12ம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும் 1,200 அறைகளுக்கும் காவலர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.

தேர்வு நேரத்தில் முறைகேடுகளை தடுக்க 3,050 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும்.