399 நடமாடும் மருத்துவ சேவை திட்டம்- முதலமைச்சர்

“தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

ஒரு வாகனத்திற்கு தலா ரூ.18 லட்சம் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு 70.02 கோடி ரூபாய் நிதி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு,

அதன் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/