4000 டன் மூலப்பொருட்கள் எரிந்து நாசம்!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார்களை பதப்படுத்தி மூலப்பொருள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலைஉள்ளது

இதில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக ஆலையில் பணிபுரிந்த அனைவரையும் வெளியேற்றினர்.

இதனை தொடர்ந்து பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ வேகமாக பரவி குடோன் முழுவதும் பரவி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த மூலப்பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இந்த தீ விபத்தில் 4,000 டன் அளவிலான மூலப்பொருட்கள் சேதமடைந்துள்ளன.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/