ஐ.ஐ.டி.யில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.டி.யில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஐஐடி

டாக்டர் ராதா கிருஷ்ணன், ‘‘சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் 1,420 பேருக்கு சென்னை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இதுவரை மொத்தம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்படுள்ள நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
பரிசோதனையில் இவர்களுக்கு எந்த வகை கொரோனா தொற்று என்பதை அறிய 2 வாரங்கள் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை எக்ஸ்&இ. வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை. தொற்று பாதிப்பும் குறைந்த அளவில்தான் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/