6 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி : எங்கெல்லாம் துணை மின்நிலையங்கள் வேண்டுமோ, மின் மாற்றிகள் மாற்ற வேண்டுமோ அதையெல்லாம் துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதம் விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்து ஆறு மாத காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக ஒரு லட்சம் விவசாயிகளிடம் முதலமைச்சர் பேச உள்ளார்.