மாணவர்களுக்கான சத்துணவில் கூடுதல் உணவு சேர்ப்பு?

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சத்துணவு திட்டத்துக்கு உயிர்ம விளை பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் உள்ள 43 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக் கடலை, சத்தான காய்கறிகள் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே உயிர்ம விளை பொருட்களை வழங்கும் திட்டம் தற்போது இல்லை என தெரிவித்தார். இதற்கு பின்னர் பேசிய ஜவாஹிருல்லா சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதாஜீவன் தேங்காய் துண்டு வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார்

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/