அஜித் பட பிரபல நடிகை, கணவருடன் கைது!

’தல’ அஜித்துடன் அமராவதி படத்தில் நடித்திருந்த நடிகை நவ்நீத் கவுர்.இந்தி, தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், தீவிர அரசியலில் களமிறங்கினார்.

சுயோட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடிகை நவ்நீத் கவூர், போலியாக சாதி சான்றிதழ் கொடுத்து, தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக வழக்கு தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்திருந்தது

நடிகை நவ்நீத் கவூர் ராணா, தனது கணவர் ரவி ரானாவுடன் சேர்ந்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக அறிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் ராணா தம்பதியினரின் வீட்டின் முன்பாக குவிந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டம், கலவரம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/