அரபிக்குத்து என்னோட பாட்டு இல்ல.அப்போ யாரோடது ??

விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஏகப்பட்ட விமர்சனங்களோடு வந்த படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெஹ்டே நடித்திருந்தார்.

படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி அந்த இரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அனிருத் இசையில் வந்த அந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அரபிக்குத்து பாடல் செம ரீச் ஆனது. அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிர்ந்தார்

 சிவகார்த்திகேயன், உண்மையில் அந்த பாட்டை நான் எழுதவில்லை, அனிருத் சில அரபி வார்த்தைகள் எல்லாம் சேர்த்து ஃபுல்லா பாடி எனக்கு அனுப்பியிருந்தார்.

அதை கேட்டு சில வார்த்தைகளை மட்டும் நீக்கி தமிழ் வார்த்தைகள் சிலவற்றை சேர்த்தேன் மத்தபடி இது அவருடைய பாட்டுதான் என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/