160 மொழிகளில் வெளிவருதா ! என்ன படம் … ரிலீஸ் தேதி எப்போ !

2009ம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பு பெற்ற அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு வெளியாகும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

உலகமே எதிர்பார்த்து வரும் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் அறிவித்துள்ளார்.

2009ம் ஆண்டில் வெளியான இந்த படம் மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்படும் என சொல்லப்பட்டது.இப்படம் 1500 கோடியில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது ‘அவதார் 2′ தயாராகி வருகிறது.’அவதார் 2’ திரைப்படம் தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் டிசம்பர் 21, 2021ல் வெளிவரும் என இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சினிமா படைப்புக்கான இலக்கணத்தை மாற்றி எழுதியது அவதார். இந்த இரண்டாம் பாகமும் சினிமாவை அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/