BMW காரை பரிசளித்த சென்னை ஐ.டி. நிறுவனம் !!

சென்னை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதன் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் உள்ளார்.

இந்த நிறுவனத்தை தொடங்கியப்போது ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேரும் பணியில் இணைந்துள்ளனர்.பின் இந்த நிறுவனத்தின் பல ஏற்ற, இறக்க நேரங்களிலும் நிறுவனத்துடன் ஐந்து பேரும் பயணித்துள்ளனர்.

ம்பெனியின் வளர்ச்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் பரிசாக வழங்கினார்.

குடும்பத்தோடு வந்து காரை பெற்றுக் கொண்ட ஊழியர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/