மத அடையாளங்களுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவமாணவிகள் மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூர் கோபிநாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவமாணவிகள் அணிந்து வருகின்றனர். இது சீருடை விதிகளுக்கு எதிரானது என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை போல தமிழகத்திலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/