சிபிஎஸ்இ : இரண்டாம் பருவ பொதுத்தேர்வுகள்

இன்று முதல் இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பொதுத்தேர்வுகள் தொடங்கப் பட்டுள்ளன.

தேர்வு

இன்று முதல் ஜூன் 14ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளன.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வை 21,16,209 மாணவர்கள் எழுதி வருகின்றனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை 14,54,370 மாணவர்கள் எழுத இருகின்றனர்

பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்கவும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கவும் சிபிஎஸ்இ போர்டு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/