சமத்துவபுரத்தில் வாலிபால் விளையாடிய முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று விழுப்புரம் சமத்துவபுரத்தை திறந்து வைத்து அதன்பின் வாலிபால் விளையாடினார்.

இன்று விழுப்புரத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், சமத்துவபுரத்தில் உள்ள கலைஞர் விளையாட்டு திடலில் வாலிபால் போட்டியையும் அவர் தொடங்கிவைத்தார்

விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முன் அவர் சில நிமிடங்கள் வாலிபால் விளையாடினார்.

முதல்வர், ஸ்டாலின், வாலிபால்,