தமிழகத்தில் 31 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு ஏதும் இல்லை..!

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

இன்று ஒரே நாளில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 243 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.