இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஜூனில் கொரோனா 4 வது அலை ஏற்படலாம் என கான்பூர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் ஏப்ரல் 19ம் தேதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 7,300 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு 141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் மாணவா்களில் 4 பேர் சின்னம்மை, டெங்கு, டைபாய்டு பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/