CUET 2022: ஏப்ரல் 2 முதல் விண்ணப்பிக்கலாம்…

இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு யுஜிசி புதிதாக கொண்டு வந்துள்ள பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் வழங்கவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

விண்ணப்ப படிவம் பெறுவதற்கான கடைசி தேசி ஏப்ரல் 30 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் பல்கலைகழகங்கள் வழங்கும் படிப்பில் சேர்வதற்கான தகுதி விவரங்களை செக் செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.

CUET இணைத்தளத்திற்கு ( (https://cuet.samarth.ac.in/) சென்று, விண்ணப்ப படிவத்தை சப்மிட் செய்ய வேண்டும்.