2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பான 1 ஆயிரத்து 247 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 2 ஆயிரத்து 67-ஐ விட அதிகமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 7 லட்சத்து 8 ஆயிரத்து 111 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/