இந்த படமாவது உருப்படியா இருக்குமா? இடியட் இயக்குனருக்கு நெட்டிசன்கள் கேள்வி

இந்த படமாவது உருப்படியா இருக்குமா? இடியட் இயக்குனருக்கு நெட்டிசன்கள் கேள்வி

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’: பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில்!

சமீபத்தில் வெளியான சிவாவின் ’இடியட்’ திரைப்படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சந்திரமெளலி, மீனாட்சி கோவிந்தராஜன், ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கின்றார். சேவிலோராஜா ஒளிப்பதிவில், வெங்கட்ரமணன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ரகுநாதன் தயாரிக்கின்றார்.

இடியட் போல் மொக்கையாக இல்லாமல் இந்த படமாவது உருப்படியா இருக்குமா? என இடியட் இயக்குனருக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.