வரவேற்பு திடீரென ரத்து செய்த இயக்குனர் ஷங்கர் !!!

இந்திய அளவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

அதில் டாக்டராக உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

கொரானா பாதுகாப்பு கருதி ஊடரங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு ஷங்கர் தம்பதியினர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனராம்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/