மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணம் சலுகை இல்லை: அதிர்ச்சி அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணம் சலுகை இல்லை: அதிர்ச்சி அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிக்கப்பட்டது என்று அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து தமிழக எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார் அரசுக்கு இதயம் வேண்டும் என்றும் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிக்கப்பட்டது கொடுமையானது என்றும் தெரிவித்துள்ளார்

கட்டண சலுகை என்பது சமூகத்தின் நன்றி கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட என்றும் அவர்கள் கைபிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது என்றும் அதை மறந்து அவர்கள் மீது அரசு உலகில் தாக்குதலை நடத்துவது கொடூரமானது என்றும் கூறப்பட்டுள்ளது