முதலில் நீ அதை கொண்டு வா, அப்புறம் ஷூட்டிங் தொடங்கலாம்…! ரஜினி பிடிவாதம்…

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படத்தை  டாக்டர் திரைப்பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நெல்சன் திரைப்படமாகவும் இல்லாமல், விஜய் திரைப்படமாகவும் இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த திரைப்படம் வெளியான அடுத்த நாள் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு, முதல் 5 நாள் கழித்து நிலைமை தலைகீழானது. பீஸ்ட் திரையரங்குகள் பெரும்பாலானவை கே.ஜி.எப் பக்கம் தாவின.

பீஸ்ட் வெளியாவதற்கு முன்னரே இயக்குனர் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்க உள்ள 169வது திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார். மேலும் பீஸ்ட் படத்தையும் அவர் பார்த்தார். பீஸ்ட் படம் பார்த்து ரஜினி எந்த கருத்தும் சொல்லாமல் சென்றுவிட்டார் என்றே சினிமாவாசிகள் கூறினர்.

இதையும் படியுங்களேன் – 2022-ல் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்!.. என்ன இதுதான் முதலில் இருக்கா?…

ஏற்கனவே, ரஜினிக்கு கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரியாக போகவில்லை. அதனால் இந்த படத்தை நெல்சனை நம்பி கொடுக்கலாமா என யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது, நெல்சன் இடம் ரஜினி இப்படத்தின் முழு ஸ்க்ரிப்ட் புத்தகத்தையும் கேட்டுள்ளாராம்.