கோவாவில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுள்ளார்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவது தொடர்பான முன்மொழிதல் தயாரிக்கும்படி கோவா உணவுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்தியோதயா ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவரும் இதில் பயன்பெறலாம்.இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/