இலவச பயிற்சி வகுப்புகள்.. தமிழக அரசு !!

ஜூலை மாதம் 24-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகள்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

இதற்கு, வரும் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் கட்டணமில்லா பயிற்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று மாதகாலம் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியை மேற்கொள்ள விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் இன்று (27-ம் தேதி) முதல், மே 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/